மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 2-ஆம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனை அவரே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து மேதாந்தா மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்றார் அமித் ஷா.
சிகிச்சைக்கு பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்ததும் அந்த மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பினார் அமித் ஷா.
இருப்பினும் அவருக்கு லேசான உடல் சோர்வும், வலியும் இருந்ததால் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ‘போஸ்ட் கோவிட்19’ வார்டில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்றுள்ள அமித் ஷா விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.
அதன்படி அவர் இன்று காலை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.