சித்தராமையா - அமித்ஷா கண்டனம் முகநூல்
இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு; மெளனம் களைத்த அமித்ஷா.. நன்றி தெரிவித்த சித்தராமையா.. பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான விவகாரம்தான் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

PT WEB

கர்நாடக மாநிலம் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான விவகாரம்தான் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா மஜதவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்தவகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

மேலும், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்ப காங்கிரஸ் அரசுதான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். ஹுப்பள்ளியில்  தேர்தல் பரப்புரையில்
ஈடுபட்ட அமித் ஷா,இது குறித்து தெரிவிக்கையில், “பாலியல் குற்றம் புரிந்த யாருக்கும் பாஜக ஆதரவாக இருக்காது. அது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பிரஜ்வல் மீது பாலியல் புகார்கள் வெளியான உடனேயே நடவடிக்கை எடுக்காமல் வாக்குப்பதிவு நடந்து முடியும் வரை காங்கிரஸ் அரசு அமைதி காத்தது ஏன்?.
காங்கிரசின் இந்த தாமதம்தான் பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல காரணமாக அமைந்தது.”
என்று அமித்
ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் கோபத்தை வெளிப்படுத்திய அமித்ஷாவுக்கு நன்றி கூறியுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து விமர்சித்துள்ளார்.

சித்தராமையா

அதில்,

”கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பாஜக எடுத்துள்ளது. ஒலிம்பிக் வீராங்கணைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக போராடியபோது, தங்கள் கட்சியின் எம்.பி.யின் பக்கம் பாஜக நின்றதை மறக்க முடியாது.

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு குற்றவாளிகளை, பாஜக அரசு விடுவித்தது, அவர்களுக்கு பாஜகவினர் மாலை அணிவித்து வரவேற்றதையும் மறக்க முடியாது. உன்னாவ் சிறுமி பலாத்கார கொலை, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளை பாதுகாத்தது, மணிப்பூரில் ஆடைகளை களைந்து பெண்களை கொடுமைபடுத்திய விவகாரங்களில், பாஜக அரசு கண்ணை மூடிக்கொண்டதை மறக்க முடியுமா?.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.