உயிரிழந்த நர்ஸ் கூகுள்
இந்தியா

கேரளா|வெளிநாடு செல்லும் குஷியில் செல்போன் பேசிக்கொண்டே அரளிப்பூவை சாப்பிட்ட செவிலியர்! பறிபோன உயிர்!

Jayashree A

செல்போனில் பேசியபடி செடியில் இருந்த அரளிபூவை பறித்து சாப்பிட்ட செவிலியர் பலியான சோக சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்தவ சூர்யா சுரேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற நினைத்த சூர்யாவுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது.

தான் நினைத்தது நடக்கவுள்ள மகிழ்ச்சியில் இருந்த சூர்யா, தனது சந்தோஷத்தை உறவினர்கள், நண்பர்களிடையே பகிர்ந்து வந்ததுள்ளார். இதன் தொடர்சியாக, தான் ஏர்போர்ட் செல்லும் முன்னதாக, அண்டை வீட்டார்களிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பும் வழியில் பேசிக் கொண்டே வந்துள்ளார். அப்போது எதேச்சையாக அரளிப்பூவை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது அவர் பேசிக் கொண்டு வரும் வழியில் அரளி மரம் ஒன்று இருந்துள்ளது. பேச்சு சுவாரஸியத்தில் இருந்த சூர்யா, மரத்தில் இருந்து அரளிபூவை பறித்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

தான் சாப்பிட்டது அரளி பூ என்று தெரியாமல், திட்டமிட்டபடி, ஆட்டோவில் ஏறி ஏர்போர்ட் சென்றுள்ளார். ஆனால் , செல்லும் வழியில் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டதால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

ஒரு செவிலியர் அரளிப்பூ சாப்பிட்டு மரணமடைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் இதுகுறித்து உறுதியான முடிவு எடுக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தற்போது பசு ஒன்றும் கன்றுக்குட்டி ஒன்றும் அரளிப்பூ சாப்பிட்டு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரளிப்பூவை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.