இந்தியா

சத்தீஸ்கர் : ஊரடங்கில் ஆன்லைன் மூலம் வீட்டுக்கே மதுபானம் விற்பனை செய்ய அரசு முடிவு!

சத்தீஸ்கர் : ஊரடங்கில் ஆன்லைன் மூலம் வீட்டுக்கே மதுபானம் விற்பனை செய்ய அரசு முடிவு!

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் பெரும்பாலான மாநில அரசுகள் ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தி உள்ளன. அதில் சத்தீஸ்கர் மாநிலமும் ஒன்று. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆன்லைன் மூலம் வீட்டுக்கே மதுபானம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி சத்தீஸ்கர் மாநில மார்க்கெட்டிங் கழகம் லிமிடெட் சார்பில் வரும் 10ஆம் தேதி முதல் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை கலால் துறையினர் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. அப்ளிகேஷன் மற்றும் பிரத்யேக வலைப்பக்கம் மூலமாக மது வஸ்துக்களை ஆர்டர் செய்யலாம் எனத் தெரிகிறது. அப்படி ஆர்டர் செய்யப்படும் மதுவை அவரவர் வீட்டிற்கே நேரடியாக டெலிவரி செய்யப்பட உள்ளது. காலை 9 முதல் இரவு 8 மணி வரை இந்த ஹோம் டெலவரி சேவை செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு சமயத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சத்தீஸ்கர் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருந்த போதும் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்திருந்தது சத்தீஸ்கர் அரசு. 

அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.