இந்தியா

ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை!

ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை!

webteam

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார்.  தேர்தல் பிரசாரத்தின்போது, பரவுலியா என்ற கிராம குடியிருப்புவாசிகளிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை, ஸ்மிருதி அவமதிப்பு செய்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஸ்மிருதிக்கு ஆதரவாக, காலணிகளை வழங்கிய பணியில், முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்த சுரேந்திர சிங் (50) என்பவர் ஈடுபட்டிருந் தார். இந்நிலையில் இவர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரை சுட்டுவிட்டு தப்பி னர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரண மடைந்தார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதும் அமேதி எம்.பி, ஸ்மிருதி இரானி, சுரேந்திர சிங் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல அங்கு சென்றுள்ளார்.