கொடைக்கானலில் இன்று அதிகாலை வரை தென்பட்ட ஸ்ட்ராபெரி நிலவை மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நேற்று நடந்தது. நள்ளிரவு 11:15 மணிக்கு துவங்கிய சந்திர கிரகணம் இன்று அதிகாலை 2:30 மணி வரை நடைபெற்றது. இதற்கு ஸ்ட்ராபெரி நிலவு என வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானல் வான் இயற்பியல் மையத்தில் இருந்து நிலவை பார்த்தபோது, மேக மூட்டங்களுக்கு இடையே ஒளிரும் வண்ணமிகு நிலவு ஒளிவட்டங்களோடு தென்பட்டது. இந்த ஸ்ட்ராபெரி நிலவை பொது மக்களும் வீட்டு மாடியில் இருந்து கண்டு ரசித்தனர்.