சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது ஒழுங்கீனங்களுக்கு வழிவகுக்கும் என, திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். பெண்களை நெரிசல் காலத்தில் கோயிலுக்குள் அனுமதித்தால், அவர்களின் பாதுகாப்பிற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலைக் கோயிலை தாய்லாந்தில் உள்ள பாலியல் சுற்றுலா கோயில்கள் போல மாற்ற விரும்பவில்லை என்றும் நீதிமன்றமே அனுமதித்தாலும், சுயமரியாதையுடைய பெண்கள் கோயிலுக்குள் வருவார்கள் என நம்பவில்லை என்றும், தேவஸம் போர்டு தலைவர் கூறியிருக்கிறார்.