இந்தியா

'யாரையும் சும்மா விடமாட்டேன்' - பஞ்சாப் காங்கிரசில் வலுக்கும் மோதல்

'யாரையும் சும்மா விடமாட்டேன்' - பஞ்சாப் காங்கிரசில் வலுக்கும் மோதல்

கலிலுல்லா

பஞ்சாப் காங்கிரஸில் கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் யாரையும் சும்மா விடப்போவதில்லை என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மிரட்டல் விடுத்துள்ளார்.

பஞ்சாப்பில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் இருவர், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்த சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டனர். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கருத்துகளை கூறியதாக அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குமாறு பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் வலியுறுத்தினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சித்து, தன்னை சுதந்திரமாக முடிவெடுத்து செயல்பட அனுமதிக்குமாறும், இல்லையெனில் யாரையும் சும்மா விடப்போவதில்லை என்றும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை சித்து நீக்காவிட்டால் தாம் நீக்கப்போவதாக ஹரிஷ் ராவத் கூறியுள்ளதால், பஞ்சாப் காங்கிரசில் மோதல் வலுத்துள்ளது.