மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 60,000 கோடியில் இருந்து 86,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி திட்டமான பி.எல்.ஐக்கு 6,200 கோடி நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் உற்பத்திக்காக 6,903 கோடி ரூபாயும், சூரிய மின்சர உற்பத்தித் திட்டத்திற்காக 8,500 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கான ஒதுக்கீடு 297 கோடியில் இருந்து 600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.