இந்தியா

போலி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த உ.பி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்

போலி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த உ.பி எம்.எல்.ஏ தகுதி நீக்கம்

webteam

வேட்பு மனுத்தாக்கலின்போது போலி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த உத்திரபிரதேச எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரின் சுவார் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் அப்துல்லா அசாம் கான். இவர் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கானின் மகன் ஆவார். இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த புகாரில், “2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் போது அப்துல்லாவுக்கு 25 வயது பூர்த்தி ஆகவில்லை. போலியான ஆவணங்களை சமர்பித்தே தேர்தலில் போட்டியிட்டார்” என புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கலின்போது போலி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததால் எம்.எல்.ஏ அப்துல்லா அசாம் கானை தகுதி நீக்கம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.