ஊழல் நடந்த பிறகே ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் விழித்துக் கொள்வது ஏன்? என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைக்கடை தொழிலதிபர் ரூ.11,500 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற விஷயம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடி செய்தி வெளியான சில தினங்களில் பிரபல பேனா நிறுவன உரிமையாளர் பல்வேறு அரசு வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாது குறித்த தகவல் வெளியானது.
அடுத்தடுத்து வங்கி மோசடிகள் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ஊழல் நடந்த பிறகே ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், மத்திய புலனாய்வு ஆணையம் விழித்துக் கொள்வது ஏன்? என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏன் ரிசர்வ் வங்கி மோசடிகளை கண்காணிக்க தவறிவிட்டது?, அது பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளில் பிசியாக இருக்கிறதா? பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் ரிசர்வ் வங்கி இன்னும் பழைய நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறது..! ரிசர்வ் வங்கி தனது தன்னாட்சியை இழந்துவிட்டதா? என்று பல்வேறு கேள்விகளையும் முன் வைத்துள்ளது.