இந்தியா

தாய் மொழி கண்கள் போன்றது: வெங்கய்யா நாயுடு

webteam

அனைத்து படிப்புகளும் இந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, “ மருத்துவம், பொறியியல் உள்பட அனைத்து படிப்புகளும் இந்திய மொழிகளில் கற்பிக்கப்பட வேண்டும். அவரவர் தாய் மொழியில் பேசும் போது கருத்துக்களைத் தெரிவிக்க எளிதாக இருக்கும். இதற்காக நான் ஆங்கிலத்தை வேண்டாம் என கூறவில்லை, ஆங்கிலமும் கற்கவேண்டும். ஆனால் அதற்கு முன்பு அவரவர் தாய் மொழியைக் கற்க வேண்டும். இந்திய மொழிகளைக் கற்கவும், கற்பிக்கவும் ஊக்குவிக்கவில்லை என்றால் வருங்கால சந்ததியினர் அவரவர் தாய் மொழிகளில் பேச சிரமப்படுவர். தாய் மொழி என்பது கண்கள், மொழி கண்ணாடிகள். கண்களுக்கு மேல் கண்ணாடிகளை அணிந்துக்கொள்ளலாம். ஆனால் கண்கள் இல்லை என்றால் பார்வை கிடையாது” எனக் கூறினார்.