இந்தியா

உ.பி: 5 குழந்தைகளுடன் 5 நாட்கள் உணவு இல்லாமல் பசியில் தவித்த விதவை பெண்

உ.பி: 5 குழந்தைகளுடன் 5 நாட்கள் உணவு இல்லாமல் பசியில் தவித்த விதவை பெண்

webteam

உத்தரபிரதேசத்தில், 40 வயது விதவை பெண்ணும் அவரது 5 குழந்தைகளும் 5 நாட்கள் உணவு இல்லாமல் பசியால் தவித்து வந்த வேதனையாக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் குட்டி(40). இவரது கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். குட்டியும் அவரது மூத்த மகனும் கட்டட வேலைக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உணவுக்கே வழியில்லாமல் அக்கம்பக்கத்தினரிடம், உறவினரிடம் உணவு பெற்று உண்டு வந்துள்ளனர். ஆனால் சில நேரங்களில் இவர்களுக்கு உணவு கிடைக்கப்படுதில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக குட்டியும் அவரது 5 குழந்தைகளும் உணவே இல்லாமல் பசியுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இதையறிந்த தன்னார்வலர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரிக்க மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர பூஷண் சிங் ஒரு குழுவை அமைத்து அந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளித்துள்ளார்.