வாடிக்கையாளர்களின் தகவல்களை வெளியிட்ட புகாரில் யுசி பிரவுசர் நிறுவனத்திடம் மத்திய அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் யுசி பிரவுசர் தேடு தளத்தை பயன்படுத்துபவர்களின் தகவல்களை சீனாவில் உள்ள தங்கள் சர்வருக்கு அனுப்பியதாக அந்நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. யுசி பிரவுசர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் இந்தியாவில் அதன் செயல்பாடுகள் தடை செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் இவ்விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு தகவல் எதுவும் வரவில்லை என்றும், இந்திய அரசின் விதிமுறைகளை தாங்கள் முறையாக பின்பற்றி வருவதாகவும் யுசி பிரவுசர் விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் உள்ள அலிபாபா நிறுவனத்தின் ஒரு அங்கம்தான் யுசி பிரவுசர் ஆகும்.