மகாராஷ்ட்ராவின் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. இந்தப் புதிய கூட்டணியுடன் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக நிலையில் வரும் 30ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதில் 36 புதிய அமைச்சர்களும் அவர்களில் 13 இடங்கள் தேசியவாத காங்கிரசுக்கும் 10 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் பாஜக-சிவசேனா கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்தது. இதையடுத்து பாஜக தலைமையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்ட்ர முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகவும் இருந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் தொடர்ந்து வழக்கில், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன்பே சுமார் 80 மணி நேரத்தில், தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வரான அஜித் பவாரும் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.