தேசியவாத காங்கிரஸ் புதிய தலைமுறை
இந்தியா

“இணையமைச்சர் பதவி வேணாம்... கேபினட் அமைச்சர் பதவி வேணும்...” - ட்விஸ்ட் வைக்கும் தேசியவாத காங்கிரஸ்!

PT WEB

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு. மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த கட்சிக்கு தனிப்பொறுப்புடன் மத்திய இணையமைச்சர் பொறுப்பை வழங்க பாஜக முன்வந்ததாகவும், ஆனால் அவர்கள் அமைச்சர் பொறுப்பு கேட்பதாகவும் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார். இந்நிலையில், “பாஜக கொடுக்க வந்த பொறுப்பை ஏற்க மறுத்து, பிரஃபுல் படேலுக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என அஜித் பவார் தரப்பு வலியுறுத்தியது.

தேவேந்திர பட்நாவிஸ்

கூட்டணி ஆட்சியில் ஒரு வியூகம் வகுக்கப்பட வேண்டும். அது ஒரு கட்சிக்காக மாற்றப்பட முடியாது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது தேசியவாத காங்கிரஸ் கருத்தில் கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், “நாங்கள் காத்திருக்க தயார். ஆனால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும். தற்போது எங்கள்வசம் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் விரைவில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மட்டுமன்றி, பிரஃபுல் படேல் ஏற்கனவே மத்திய கேபினட் அமைச்சராக இருந்தவர். அவரை இணையமைச்சராக்குவது முறையல்ல. அதே நேரம் தேசத்தின் நலன் கருதி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.