இண்டிகோ விமான ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தெலுங்கு தேச எம்.பிக்கு விமான நிறுவனங்கள் திடீர் தடை விதித்துள்ளன.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் திவாகர் ரெட்டி. தெலுங்கு தேசம் எம்.பியான இவர், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய நேற்று காலை தாமதமாக வந்தார்.
இதனால் விமான நிறுவன ஊழியர், கவுன்ட்டர் மூடப்பட்டுவிட்டது. நீங்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அடுத்த விமானத்தில் செல்லலாம் என்றார். அவரிடம் தகராறில் ஈடுபட்ட ரெட்டி, கோபத்தில் அங்கிருந்த கம்யூட்டரை தள்ளிவிட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பின்னர் அவர் அதே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
பின்னர் இண்டிகோ விமானம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ஊழியரிடம் தகாத முறையிலும் நடந்துகொண்ட திவாகர் ரெட்டி எம்.பி.யை, இண்டிகோ விமானத்தில் அனுமதிக்கமாட்டோம்’ என்று தெரிவித்தது.
இண்டிகோவைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், கோ-ஏர், விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும், திவாகர் ரெட்டிக்கு தடை விதித்துள்ளன.