இந்தியா

சிகிச்சைக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த மனோகர் பாரிக்கர்

சிகிச்சைக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த மனோகர் பாரிக்கர்

webteam

கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் 4 மாதங்களுக்குப் பிறகு புத்தாண்டான இன்று முதன்முறையாக தலைமைச் செயலகம் வந்தார்.

63 வயதான மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

அதன்பிறகு 4 மாதங்களுக்குப் பின் புத்தாண்டான இன்று கோவா தலைமைச் செயலகத்துக்கு வந்து பணியாற்றினார். அவர் மூக்கில் சின்ன ட்யூப்புடன் தலைமைச் செயலகத்திற்கு வந்தார். காரில் இருந்து இறங்கும்போது நடக்கமுடியாமல் உதவியாளரின் துணையுடனே அவர் சென்றார். அப்போது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். 

காலை 10.30 மணியளவில் மனோகர் பாரிக்கர் தனக்கு உதவும் மருத்துவக் குழுவோடு தலைமைச் செயலகத்து வந்தடைந்து ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.