டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இளங்கலைப் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன. இந்தத் தேர்வை 3 லட்சத்து 38 ஆயிரத்து 457 மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவர்களில் மொத்தம் 11,380 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.352 மாணவர்களும், 4,027 மாணவிகளும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வில் வென்று சாதித்துள்ளார்.
இந்தத் தேர்வில் 4 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் பாவிக் பன்சால் என்ற மாணவர் நடந்த முடிந்த நீட் தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். அவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 700 மதிப்பெண்கள் பெற்றவர். பன்சால் கூறும்போது, நீட் தேர்வை விட, எய்ம்ஸ் மருத்துவமனை தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.