இந்தியா

புதிய நிதித்துறை செயலராக ஏ.என்.ஜா நியமனம்

புதிய நிதித்துறை செயலராக ஏ.என்.ஜா நியமனம்

Rasus

த்திய நிதித்துறையின் புதிய செயலராக ஏ.என்.ஜாவை நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலை அடுத்து ஏ.என்.ஜா புதிய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே மத்திய நிதித்துறை செயலாரக இருந்த ஹஷ்முக் அதியா, நவம்பர் 30-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஏ.என்.ஜா புதிய நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

59 வயதான ஏ.என்.ஜா, 1982-ஆம் ஆண்டு, மணிப்பூர்- திரிபுரா பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டப் படிப்பையும், பட்டமேற்படிப்பையும் ஏ.என்.ஜா பயின்றுள்ளார். மேலும், உலக வங்கியின் உதவித் தொகையுடன் கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் மேலாண்மை முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். இதுதவிர, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் எம்ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.