விஞ்ஞானி அஸ்வினி மற்றும் அவரது தந்தை pt web
இந்தியா

தெலங்கானா மழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளம் விஞ்ஞானி அஸ்வினி.. பரிதாபமாக உயிரிழப்பு

தெலங்கானா மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி. அவரும் அவரது தந்தையும் சத்தீஸ்கரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதாக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய்யகுடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் டாக்டர் அஷ்வினி சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இறுதி நேரத்தில் அஸ்வினியும் அவரது தந்தையும் உறவினர்களை தொலைபேசியில் அழைத்து காரில் தண்ணீர் நிறைந்து வருவதையும் தங்களால் வெளியே வரமுடியாத பரிதாப நிலையையும் கூறியுள்ளனர்.

இதன் பின்னரே அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அஸ்வினியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.