அசாம் மாநிலத்தில் திபலாங் பகுதியில் அகர்தலா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் முதல்வர் மேலும் கூறுகையில், ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம் என்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.