இந்தியா

“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா?” - மத்திய அரசு எதிர்ப்பு

“ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடலாமா?” - மத்திய அரசு எதிர்ப்பு

rajakannan

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் இவ்வளவு தூரம் தலையிடுவது தேவையற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இத்துறையில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறி பிரசாந்த் பூஷண், எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் அனல் பறக்கும்  வாதங்கள் நடைபெற்றன. 

நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் :-

எம்.எல்.ஷர்மா வாதம்:-

36 விமானங்களை வாங்குவதாக அறிவித்து விட்டு, பின்னர்தான் மத்திய அரசு பேரத்தில் ஈடுபட்டுள்ளது, இதனை அவர்களின் பிராமணப்பத்திரம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இத்தனை பெரிய பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பை ஒரு பிரதமர் எப்பபடி அறிவிக்கலாம்

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதம்:

  • ரஃபேல் விவகாரத்தில் நடைமுறை, விலை, ரிலையன்ஸ் நிறுவன தேர்வு ஆகியவை பிரச்னைக்குள்ளாகி இருக்கின்றன
  • இந்த பிரச்னையில் இருநாட்டு அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை
  • இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நாட்டின் தரப்பில் நம்முடைய இறையாண்மைக்கு உத்தரவாதம் இல்லை
  • புதிய ஒப்பந்தத்தில் முந்தைய அரசின் ஒப்பந்தத்தை விட 40 சதவீதம் அதிகமாக உள்ளது
  • விலைப்பட்டியலை வெளியிட முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது

மற்ற மனுதாரர் தரப்பு வாதங்கள்:-

  • உச்சநீதிமன்றத்தில் ரஃபேல் ஒப்பந்ததின் விலையை குறிப்பிட மறுக்கும் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் மட்டும் இரண்டு முறை கூறியுள்ளது
  • 2015 மார்ச் மாதம் வரை 126 விமானங்கள் வாங்குவதாக மத்திய அரசு சார்பில் கூறிவந்த நிலையில், திடீரென அனைத்தும் மாற்றப்பட்டு 36 விமானங்கள் வாங்க அறிவிப்பு வெளியானது ஏன்?

மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதம்:-

  • உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்ற தகவல் எனக்கே தெரியாது 
  • ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விலைப்பட்டியல் நாடாளுமன்றத்தில் முழுமையாக வழங்கப்படவில்லை
  • புதிய தொழில்நுட்ப கருவிகள் சேர்த்து உருவாக்கப்பட்டதற்கு தான் புதிய வில்லை
  • ரகசியம் என்பது ஆயுதங்கள் மற்றும் பறக்கும் வானுடவியல் தொழில்நுட்பம் தொடர்பானது. அதனை வெளியிடுவது எதிர்களுக்கு பயனளித்துவிடும்
  • இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. வேண்டுமென்றால் நிபுணர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆய்வு செய்யப்பட்டும்
  • ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் தெரிவிக்க முடியாது

தலைமை நீதிபதி உத்தரவும், தலைமை வழக்கறிஞரின் எதிர்ப்பும்:-

வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் “இது தொழில்நுட்பம் சார்ந்த விவகாரம் என்பதால், இந்திய விமானப் படை அதிகாரிகள் யாரேனும் நீதிமன்றத்தில் உள்ளார்களா?” கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் “ பாதுகாப்பு துறை அதிகாரிகள் உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் கொடுப்பார்கள்” என்றார். கோபமடைந்த தலைமை நீதிபதி “ விமானப்படை அதிகாரிகளை வரச் சொல்லுங்கள், இது அவர்கள் தொடர்பான வழக்கில்லையா?” என்றார். 

விமானப்படை அதிகாரி அழைக்கப்பட்டதற்கு, மத்திய அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விமான ஒப்பந்தம் என்பது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் இந்த விவகாரத்தை இவ்வளவு தூரம் விவாதிப்பதே தேவையற்றது என்றும் அவர் வாதிட்டார். 

இதனையடுத்து, விமானப்படை மூத்த அதிகாரிகள் இருவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். 

இதனிடையே, ரஃபேல் விலைப்பட்டியல் விவகாரத்தை பொதுவெளியில் வெளியிடலாமா என்ற முடிவுக்கு நீதிமன்றம் வரும் வரை, விலைப்பட்டியல் குறித்த விவாதங்கள் இருக்காது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.