இந்தியா

பெண்கள் 33சதவீதம் இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு வலியுறுத்தல்

பெண்கள் 33சதவீதம் இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு வலியுறுத்தல்

webteam

பெண்களுக்கான33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையில் பாரதிய ஜனதாவுக்கு உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி, மசோதாவை நிறைவேற்றுமாறு, சோனியா காந்தி பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 1989 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவர முயற்சி மேற்கொண்டும் அது நிறைவேறாமல் போனதை சோனியா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி மாநிலங்களவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. ஆனால், மக்களவையில் இன்னும் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.