இந்தியா

இந்தியக் கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

webteam

இந்தியக் கடற்படை தளபதியாக இருந்த சுனில் லம்பா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.

டெல்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் புதிய தளபதியாக பொறுப்பேற்றார். அப்போது பேசிய அவர்,  “எனது முன்னோர்கள் இந்திய கடற்படைக்கு திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். புதிய உயரங்களை எட்டியுள்ளனர். அதன் வழியில் எந்தச் சவால்களையும் சந்திக்கும் விதமாக கடற்படையை வலுப்படுத்த செயல்படுவேன்” எனத் தெரிவித்தார். 

டில்லியிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் படித்த கரம்பீர் சிங், 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கடற்படையில் தனது சேவையை ஆரம்பித்தார். 1982 ஆம் ஆண்டு, ஹெலிகாப்டர் பைலட்டாக அவர் பதவி உயர்வு பெற்றார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ராணுவக் கல்லூரி மற்றும் கரஞ்சாவிலுள்ள தேசிய போர் பயிற்சி கல்லூரியில் படித்து அதே அமைப்புகள் சில காலம் பணியாற்றியுள்ளார். 

இந்தியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான சாந்த்பிபி, ஏவுகணை தாங்கி கப்பலான விஜய்துர்க் ஆகியவற்றின் தளபதியாகவும் இருந்துள்ளார். அதிசிறந்த சேவைக்கான பதக்கத்தை குடியரசுத்தலைவரிடம் இருந்து இவர் பெற்றுள்ளார்.