மதச்சார்பின்மை, பொதுவுடைமை என அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட வார்த்தைகளை நீக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை 23ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவசர காலத்தில் இந்திய சட்டத்தில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் தற்போது தேவையில்லாதவை என்பதால், அவற்றை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார்.
இது தொடர்பான மனு உயர்நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளது என எதிர் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்வதாக கூறிய இந்திரா பானர்ஜி அமர்வு வழக்கு விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.