இந்தியா

கூடுதலாக 50,000 கோடி ரூபாய் கடன் வசதி.. கோவிட் நிவாரண வரம்பு அதிகரிப்பு.!

கூடுதலாக 50,000 கோடி ரூபாய் கடன் வசதி.. கோவிட் நிவாரண வரம்பு அதிகரிப்பு.!

webteam

அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வரம்பை அதிகரிக்க இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் இந்த முடிவினால் விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று அறிவித்தார். மேலும் கோவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், அந்த துறைக்கு கடனுதவி வரம்பு அதிகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவசர கால கடனுதவி திட்டம்  31.3.2023 வரை செல்லுபடியாகும் எனவும், இத்திட்டத்தின் கீழ் 5.08.2022 வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.