இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவிகிதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி 'Asian Development Outlook 2019 update ' என்ற ஆய்வு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்ததே காரணம் என்று இந்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தனது 'Asian Development Outlook 2019’ அறிக்கையில் கணித்திருந்தது. இந்த வளர்ச்சி சதவிகிதம் குறைப்பிற்கு உற்பத்தித்துறையில் காணப்படும் மந்தநிலையே வளர்ச்சி குறைய காரணம் என தெரிவித்துள்ளது. எனினும் 2020ஆம் ஆண்டில் அடுத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று இந்தப் புதிய அறிக்கை கணித்துள்ளது.