இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 4 மாதங்களுக்கு முன்பே நிறுத்தம் - சீரம் நிறுவனம் தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி 4 மாதங்களுக்கு முன்பே நிறுத்தம் - சீரம் நிறுவனம் தகவல்

சங்கீதா

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 4 மாதங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவன தலைவர் அதார் பூனாவாலா மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதிகளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் அவற்றின் உற்பத்தியை கடந்த டிசம்பர் மாதமே நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார். தற்போது 20 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள நிலையில் அவற்றை இலவசமாக தர முன் வந்தும் கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்றும் அதார் பூனாவாலா தெரிவித்தார்.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது மோசமான விளைவுகளை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 5 முதல் 11 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அதார் பூனாவாலா கேட்டுக்கொண்டார். 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் ஊசி செலுத்திக்கொள்வதற்கான கால இடைவெளியை 6 மாதமாக குறைக்க வேண்டும் என்றும் அரசை அவர் வலியுறுத்தினார்.