மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து ‘நீட்’ விவகாரம் குறித்து பேசினார் நடிகை கவுதமி.
தமிழத்தில் நீட் விவகாரம் சம்பந்தமாக பல்வேறு மாணவ அமைப்பினர் அரசியல் கட்சியினர் தினம் ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அனிதா என்ற
மாணவி மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியால் தற்கொலை செய்து கொண்டார். அதை முன் வைத்து முழுமையாக நீட் விலக்கு கேட்டு பலரும் பல
வழிகளில் முயன்று வருகின்றனர்.
ஏற்கெனவே நடிகை கவுதமி பாஜக கட்சியில் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட்டு கொண்டிருந்தார். பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி சமூக
சேவையில் ஈடுபடலானார். குறிப்பாக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இயற்கை வேளாண்மை சார்ந்து இயங்கி வருகிறார்.
சில மாதங்கள் முன்பு அவர் ஆரம்பிக்கப் போகும் அறக்கட்டளைக்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். அவரது சந்திப்பு அப்போது
பரபரப்பாக பேசப்பட்டது.
கமலுடன் இருந்து விலகிய கவுதமி சமீபக் காலமாக சமூக செயல்பாடுகளில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு இயங்கி வருவது கவனத்திற்குரியது.