தர்ஷன், விஜயலட்சுமி எக்ஸ் தளம்
இந்தியா

”மனைவி நான் இருக்கையில்..” பவித்ரா கவுடா குறித்து நடிகர் தர்ஷனின் மனைவி போலீஸ் கமிஷனருக்கு கடிதம்!

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தப்படி உள்ளன. இந்த நிலையில், ”தர்ஷன் தூகுதீபாவின் சட்டப்பூர்வ திருமணமான ஒரே மனைவி நான்தான்” என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள். பவித்ரா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது. இது எதிர்காலத்தில் எனக்கும் என்னுடைய மகன் வினீஷூக்கும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பவித்ரா கவுடா சஞ்சய் சிங்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய மகள் அவருடன் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறேன். பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்துகொண்டேன். எங்களுடைய திருமணம் 2023-ஆம் ஆண்டு மே மாதம் தரம்சாலாவில் நடைபெற்றது” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘ஓய்வில்லாத உழைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல்’ - வாழ்வை முடித்துக் கொண்ட ரோபோ! துயரத்தில் தென்கொரியா!

இதற்கிடையே நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜூலை 4 ஆம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பெங்களூரு மத்திய சிறை மற்றும் துமகுரு மாவட்ட சிறை அதிகாரிகளால் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களுடைய நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து, 15 பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல்லில் விரக்தி.. டி20-ல் வெற்றி.. வான்கடே மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஹர்திக் பாண்டியா’ கோஷம்!