இந்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லை பகுதியில் காலவரையற்று அறவழியில் போராடி வருகின்றனர்.
நாடு தழுவிய கடையடைப்பு, டிராக்டர் பேரணி என இந்திய அரசுக்கு விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்களது போராட்டத்திற்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் சூழலியல் போராளியான சுவீடன் நாட்டை சேர்ந்த 18 வயதான கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.
“போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” என அந்த ட்வீட்டில் அவர் சொல்லியுள்ளார். CNN இணையத்தில் பகிர்ந்துள்ள விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்தியை டேக் செய்து இந்த கேப்ஷனை போட்டுள்ளார் கிரேட்டா.
போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க முள்வேலியினாலான தடுப்பு, பாதையில் ஆணிகளும் புதைக்கப்பட்டுள்ளது.