யானைகள்  முகநூல்
இந்தியா

மரபியல் வலிமையை இழந்து அழிவை நோக்கிச் செல்லும் யானைகள்! வெளியான அதிர்ச்சிகர தகவல்!

இந்திய யானைகள் தங்கள் மரபியல் வலிமையை இழந்து அழிவை நோக்கிச்சென்று கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

PT WEB

இந்திய யானைகள் தங்கள் மரபியல் வலிமையை இழந்து அழிவை நோக்கிச்சென்று கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 5 வகை யானைகள் குறித்து பெங்களூருவில் உள்ள தேசிய உயிரி அறிவியல் மையமும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் இணைந்து விரிவான ஆய்வை நடத்தின.

இமய மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகள், மத்திய இந்திய பகுதியில் உள்ள இரு வகை யானைகளுடன் தென்னிந்தியாவில் உள்ள 3 வகை யானைகள் என 5 வகை யானைகளின் ரத்த மாதிரிகள் மரபியல் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும்போது யானைகளின் மரபியல் வலிமை குறைந்துள்ளது இதில் தெரியவந்துள்ளது. மரபியல் வலிமை குறைவு மூலம் இனப்பெருக்கத்திறன், சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளும் தன்மை உள்ளிட்டவற்றை யானைகள் இழப்பது புலனாகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக தமிழக, கேரள எல்லைப்பகுதியில் செங்கோட்டை வனப்பகுதியில் உள்ள 150 யானைகள் வேகமாக அழியும் நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண தீவுகள்போல் காணப்படும் யானைகள் வாழிடங்களுக்கு இணைப்பு பாதை அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.