இந்தியா

இந்தியாவில் 43 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: தேசிய குற்றவியல் ஆவணப் பதிவு தகவல்

இந்தியாவில் 43 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: தேசிய குற்றவியல் ஆவணப் பதிவு தகவல்

webteam

எத்தனை புள்ளி விவரங்கள் வந்தாலும், நாட்டில் நடக்கும் தற்கொலைகளில் விவசாயிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தேசிய குற்றவியல் ஆவணப்பதிவு (NCRB) வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் நடந்துள்ள தற்கொலைச் சம்பவங்களில் 32,563 தினக்கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 30,132 ஆக இருந்தது. அதாவது வேளாண் துறையில் 5,957 விவசாயிகளும், 4324 விவசாயத் தொழிலாளர்களும் 2019ல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதாவது 4324 விவசாயத் தொழிலாளர்களில் 3,749 பேர் ஆண்கள், 575 பெண்கள் என்றும் தேசிய குற்றவியல் ஆவணப்பதிவு அறிக்கை தெரிவித்துள்ளது.