இந்தியா

சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற அபுதாபி இளவரசர்

சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற அபுதாபி இளவரசர்

webteam

இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு குடியரசு தலைவர் மாளிகையில்ச சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாட்டின் 68-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அபுதாபி இளவரசர் இன்று டெல்லி வந்தார். 3 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அபுதாபி இளவரசருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நாயனுக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அபுதாபி இளவரசர் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நாளை குடியரசு தின விழா முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் தனியாக சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தியா - அபுதாபி இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.