திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிக்க ரூ.23 கோடி மதிப்பில் நெய் விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, 7 லட்சத்துக்கு 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அதில் சேலம்- ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் கலந்துகொண்டது.
நெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் லட்டுக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 2003-04ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ‘ஆவின்’ நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.