அரவிந்த் கெஜ்ரிவால் முகநூல்
இந்தியா

கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்காக இணையதளம் தொடங்கிய ஆம் ஆத்மி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.

PT WEB

டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சி முன்னெடுத்து வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது

இதில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஹோலி பண்டிகையை புறக்கணித்தனர்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி அமைச்சர் அதிஷி, “பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய பயமாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அதனாலே பிரதமர் மோடி கெஜ்ரிவாலை சிறையில் அடைத்து வைத்துள்ளார்.

ஆகவே, சர்வாதிகாரத்திற்கு எதிராக நாட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இதற்காக indiawithkejriwal.com என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சமூக வலைதள கணக்குகளில் முகப்பு புகைப்படங்களை மாற்றிக் கொள்ளலாம்” என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.