“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கக்கூடிய சூழலில், நேற்றைய தினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா “9 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிற நாடுகளின் முன்பு இந்தியா மண்டியிட்டு கொண்டிருந்தது. தற்போது உலக விவகாரங்களை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி இருக்கிறது” என பேசினார்.
இதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்தியா ஒருபோதும் மண்டியிட்டதில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் “இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்தில் மூன்று போரில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது; வங்கதேசம் என்ற ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறது; ஜெ.பி.நட்டாவின் பேச்சு, இத்தகைய போரில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது; எனவே, ஜெ.பி. நட்டாவும், பாரதிய ஜனதா கட்சியும், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.