இந்தியா

திருப்பதியில் ஆதார் கட்டாயம்: ஆதார் எண் அடிப்படையில் அறை ஒதுக்கீடு

திருப்பதியில் ஆதார் கட்டாயம்: ஆதார் எண் அடிப்படையில் அறை ஒதுக்கீடு

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் வாடகைக்கு ஆதார் எண்ணை பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ள‌து.

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் திருமலையில் 6200 அறைகள் உள்ளது. இதில் 3000 அறைகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. மற்ற அறைகளில் முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கீடு செய்யவும் ரூ.50 முதல் ரூ.1000 வரையிலான அறைகள் திருமலையில் உள்ள சி.ஆர்.ஓ. அலுவலகம் எம்.பி.சி. ஆகிய இடங்களில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்ததையடுத்து, ஆதார் எண்ணை பதிவு செய்து அதன் அடிப்படையல் வழங்கப்படும் வரிசை எண் அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக காலை 6 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதார் எண் இல்லாத‌ பக்தர்கள் அறைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.