இந்தியா

ஆதாரை இணைக்கும் அரசின் முடிவுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

ஆதாரை இணைக்கும் அரசின் முடிவுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

Rasus

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் செயல்படும் பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும், சமூக நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு சட்டவிரோதம் என்றும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுவழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்றும், உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், வழ‌க்கு விசா‌ரணை ஜூலை 7-ஆம் தேதிக்‌கு ஒத்திவைக்கப்பட்டது.