இந்தியா

ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் கார்டுகள் இணைப்பு

ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் கார்டுகள் இணைப்பு

rajakannan

ஆதாருடன் இதுவரை 23 கோடி பான் கார்டுகள் ம‌ட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்‌ வெளியாகியுள்ளது. பான் கார்டு எண்ணை ஆதார் தகவல் தொகுப்பில் இணைப்பதற்கான அவகாசம் வருகிற மார்ச் 31‌ம்‌ தேதியுடன் முடிகிறது.

நாட்டில் மொத்தம் 42‌ கோடி பான் கார்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில், இதுவரை அதில் பாதியளவு எண்கள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ‌வருமான வரித் தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில் சந்திரா குறிப்பிட்டார். 

ஆதாருடன்‌ பான் கார்டை இணைப்பது மூலம் போலி பான் கார்டுகளை கண்டறிவது எளிதாகும் என்றும் அதுபோன்ற பான் கார்டுகளை தாங்கள் ரத்து செய்ய உள்ளதாகவும் சுபாஷ் சந்திரா தெரிவித்தார். ஆதாருடன் பான் எண்ணை இணைத்து பான் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது மூல‌ம் ஒருவருடைய செலவழிப்பு விவரங்களை அறிவது எ‌ளிதாகும் என்றும் சுபாஷ் சந்திரா தெரிவ‌த்தார்.