இந்தியா

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: மத்திய அரசு திட்டவட்டம்!

webteam

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு கட்டாயம் என்ற உத்தரவு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிதாக பான் அட்டைக்கு விண்ணப்பம் செய்வோர், ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவான வரி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், பல்வேறு வகையில் ஆதாரை அவசியமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.