இந்தியா

அதற்கெல்லாம் ஆதார் தகவல்களை கொடுக்க முடியாது - தனிநபர் அடையாள ஆணையம் காட்டம்

அதற்கெல்லாம் ஆதார் தகவல்களை கொடுக்க முடியாது - தனிநபர் அடையாள ஆணையம் காட்டம்

rajakannan

கிரிமினல் விசாரணைகளுக்கெல்லாம் ஆதார் தகவல்களை பயன்படுத்த முடியாது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த முடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருந்த போதும், சிம் கார்டு வாங்குவதில் இருந்து அன்றாட வாழ்வின் பல்வேறு விவகாரங்களில் ஆதார் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்லும் இடத்தில் கூட ஆதார் எண்ணை கட்டாய கேட்டு வாங்குகிறார்கள்.

இந்நிலையில், தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் ஆதாரை நிர்வகிக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்திடம் சில தகவல்களை கேட்டுள்ளது. ஆனால், ஆதார் ஆணையம் அதனை கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆதார் ஆணையத்தின் மீது தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. முதல் முறையாக குற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்கவும், அடையாளம் தெரியாதவர்களின் சடலங்களை கண்டறியவும் போதிய தகவல்களை ஆதார் ஆணையம் அளிப்பதில்லை என்று கடுமையாக சாடியது. 

இந்நிலையில், ஆதார் பயோ மெட்ரிக்கில் உள்ள தகவல்களை குற்றவியல் விசாரணைகளுக்கு பயன்படுத்த முடியாது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கூறியுள்ளது. ஆதார் சட்டப்படி அதற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.