இந்தியா

ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்

webteam

ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வந்த லாரியை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகள் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள் எல்லை தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாகக் கூறப்பட் டிருந்தது. உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனையிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.


 
இந்நிலையில், கத்துவா பகுதியில் வந்த லாரி ஒன்றை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது, அதில் வெடிபொருட் கள், ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.