கேரளா புதிய தலைமுறை
இந்தியா

கதிகலங்கி நிற்கும் கடவுளின் தேசம்... பேரிடர்களின் பூமியான கேரளா.. இதுவரை நடந்த துயரங்கள்!

2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 3,782 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டுமே நடந்திருக்கின்றன.

PT WEB

உலகில் இப்போது மட்டுமல்ல. மிக அதிகமான இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்கும் மாநிலமாகவே இருக்கிறது கேரளா. 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 3,782 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டுமே நடந்திருக்கின்றன.

கேரளா சந்திக்கும் இயற்கை பேரிடர்களின் துயரங்களைச் சொல்ல இந்தத் தரவுகளே போதும்.

வயநாடு

இத்தரவுகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டவை. 2018, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கேரளாவில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் மட்டும் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க: கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!

இதில் 2018 மழை வெள்ளத்தில் மட்டும் 480க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2019-20 மற்றும் 2022ல் 422 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு கேரளாவுக்கு வேறுவிதத்தில் மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த மாநிலத்தில் இயல்பைவிட 24% மழை குறைவாக பெய்தது.

கடந்த 30 ஆண்டுகளில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கேரளாவில் மழை குறைவாகவும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக அளவு மழை பெய்வதுமான ட்ரெண்ட் உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. கேரள மாநிலத்தில் அதிகமான ஆறுகள், நீர்நிலைகள் இருந்தபோதிலும் மழைக்காலங்களில் அவை பொங்கிப்பெருக்கெடுத்து மாநிலமே வெள்ளக்காடாக மாறிவிடுவதால் கடவுளின் தேசம், கதிகலங்கி நிற்கிறது.

இதையும் படிக்க: ‘பாஸ்போர்ட், விசா வேண்டாம்; இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைவது எப்படி?’ யூடியூபரின் சர்ச்சை வீடியோ!