எவர்சில்வர் வெடிகுண்டு மனோரமா
இந்தியா

கேரளா: ‘எவர்சில்வர் வெடிகுண்டு’ என நினைத்து பயந்த மக்கள்.. நிபுணர்கள் சோதனையில் தெரியவந்த ட்விஸ்ட்!

கண்ணூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில்வர் வெடிகுண்டு... மக்கள் பீதியடைந்தனர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்படு நடத்தப்பட்ட சோதனையின் முடிவு என்ன என்பதை பார்கலாம்.

Jayashree A

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தில்லங்கேர் பாளையம் அருகில் உள்ள ஜல்லிக்கட்டு பகுதி ஒன்றில் வசிப்பவர் முகுந்தன். வியாபாரியான இவர், தனது வீட்டருகே குவிந்திருந்த குப்பைகளை அகற்றி அப்பகுதியை சீரமைக்கும் பணியைச் செய்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, வடிகால் பகுதிக்குக்கும் கிரானைட் சுவருக்கும் இடையே கீழே ஏதோ மர்மப்பொருள் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அது என்ன என்பதை பார்த்தபோது, எவர்சில்வரால் செய்யப்பட்ட ஒரு வெடிகுண்டைப் போன்று அது இருந்துள்ளது. இதனால் அதிர்சியடைந்த முகுந்தன் இது குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த சிலர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் அங்கு வந்து அந்த மர்மப்போருள் எவர்சில்வர் வெடிகுண்டுதான் என நினைத்து அஞ்சியுள்ளனர். இந்த இடம் அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் அதிகளவில் நடமாடும் முக்கிய இருப்பிடம் என்பதால், கூடுதல் பதற்றம் தொற்றிக்கொண்டது. நிலைமை உணர்ந்து, அப்பகுதியை காவல்துறையினர் பாதுகாப்பு தடுப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணூர் மாவட்டத்திலிருந்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சில்வர் குண்டு என நம்பப்பட்ட அதை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் அது கல்லில் உறுதியாக மாட்டிக்கொண்டிருந்ததால், அதை சுலபமாக எடுக்கமுடியவில்லை. ஆகவே வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்களை அப்புறப்படுத்திவிட்டு, மண்வெட்டியின் உதவியால், அப்பகுதியை வெட்டி, மண்களை அகற்றி நீண்ட சிரமங்களுக்கிடையே மர்மப்பொருளை எடுத்துள்ளனர். அப்போதுதான் ஒரு ட்விஸ்ட்... கிடைத்தது எவர்சில்வர் வெடிகுண்டு இல்லை... எவர்சில்வர் பாத்திரம்!

இருப்பினும் மக்கள் பாதுகாப்பு மற்றும் பதற்றநிலைக்கான காரணியாக அது இருந்ததால், போலீஸாரும் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். கிட்டத்தட்ட 5.30 மணி நேரம் தொடர்ந்து இந்த ஆய்வு, ஒருவழியாக முடிவுக்கு வந்த்தால் மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

நன்றி: மனோரமா