இந்தியா

ஹைதராபாத்: கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை; சில மணிகளில் உயிரிழந்த சோகம்!

ஹைதராபாத்: கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை; சில மணிகளில் உயிரிழந்த சோகம்!

EllusamyKarthik

ஹைதராபாத்தில் உள்ள பெட்லாபுர்ஜ் மகப்பேறு மருத்துவமனையில் கடல் கன்னியை போன்ற உடலுடன் பிறந்த குழந்தை சில மணி நேரங்களில் உயிரிழந்தது. கடந்த புதன் அன்று இரவு ஏழு மணி அளவில் பிறந்த அந்த குழந்தை அடுத்து இரண்டு மணி நேரங்களில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது மாதிரியான குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பது அரிதினும் அரிதான ஒன்று. இதனை சிரேனோமெலியா உடல் வளர்ச்சி குறைபாடு என சொல்லப்படுகிறது. 

சிரேனோமெலியா குறைப்படு என்றால் என்ன?

இது ஒரு வகையான பிறவி குறைப்படு. பிறக்கும் போதே குழந்தையன் இரு கால்களும் ஒட்டி இருக்கும். அது பார்பதற்கு கடல் கன்னி போல இருக்கும். பிறக்கின்ற மில்லியன் கணக்கிலான குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே காணப்படுகின்ற அரிதான குறைபாடு. 

இதற்கான காரணம் இதுவரை என்ன என்பது கண்டறியப்படாமல் உள்ளது. இது ஒருவிதமான மரபு சார்ந்த சிக்கலாகவும் இருக்கலாம். ரத்த சுழற்சியலும் இந்த மாதிரியான குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிக்கல் இருக்கும். பிறப்புறுப்புகள், இரைப்பை குடல் கோளாறு, முதுகெலும்பு கோளாறு, இடுப்பு மற்றும் இரு சிறுநீரகங்களும் இல்லாத நிலை காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் இதற்கு முன்னதாக 2018 வாக்கில் மகாராஷ்டிராவிலும், 2017 இல் ஹைதராபாத்திலும் இதே குறைப்பாட்டுடன் குழந்தைகள் பிறந்து சில மணிகளில் இறந்துள்ளன.