மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த உணவகம் ஒன்று, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து ஸ்டீல் கேரியரில் உணவு விற்பனை செய்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனேவைச் சேர்ந்து உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்யும் உணவுகள் ஸ்டீல் கேரியலில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றியவுடன் கேரியரை திரும்ப அளிக்கும்படி உணவகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு முன்பணமாக 200 ரூபாயை அந்த உணவகம் பெறுகிறது. கேரியரை பெற்றுக் கொண்ட பின்னர் வாடிக்கையாளர்களுக்கு முன் பணத்தையும் திருப்பித் தருகிறது.