வழக்கமாக இரங்கல் தொடர்பான அறிவிப்பு மற்றும் இரங்கல் செய்திகளை உயிர் நீத்தவரின் உறவினர்கள் தான் பத்திரிகைகள், சுவரொட்டிகள் மற்றும் கையேடுகள் மூலமாக அறிவிப்பார்கள்.
ஆனால் இந்த வழக்கமான சம்பிரதாயத்திற்கு மாற்றாக தனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதிக் கொண்டுள்ளார் சென்னையை சேர்ந்த 72 வயதான கார் ரேலி ரேஸர் எஜ்ஜி கே.உமாமகேஷ்.
சமூக வலைத்தளங்களில் அந்த இரங்கல் அறிவிப்பு பரவலாக பகிரப்பட்டு வருவதோடு நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாகவும் அமைந்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி உயிரிழந்த உமாமகேஷ் அதற்கு முன்னதாக தன் கைப்பட எழுதிய இரங்கல் கடிதத்தை தனது உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
அவரது மறைவை அடுத்து உறவினர்களும் பத்திரிகை ஒன்றில் ‘சுய இரங்கல் அறிவிப்பு’ என பிரச்சுரமாகியுள்ளது.
அது தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் டாக்காகி உள்ளது.
அதில் உமாமகேஷ் தெரிவித்துள்ளது என்னவென்றால் “அன்பான நண்பர்களே, பகைவர்களே.. இரண்டுக்கும் மத்தியில் உள்ளவர்களே.. என்னுடைய அற்புதமான வாழ்நாளில் பங்கெடுத்துக் கொண்டமைக்கு நன்றி. எனது பார்ட்டி முடிந்து விட்டது. இதில் யாரையும் ஹேங் ஓவர் நிலையில் நான் விட்டுச் செல்லவில்லை என நம்புகிறேன். எல்லோருக்குமான நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. சந்தோஷமாக வாழ்ந்து உங்களது பார்ட்டியை கொண்டாடுங்கள். சியர்ஸ் சொல்லி விடை பெறுகிறேன். உங்கள் எஜ்ஜி” என குறிப்பிட்டுள்ளார்.
தனது உடலில் பயனுள்ள உறுப்புகளை தானமாகவும், உடலை உடற்கூறியல் ஆராய்ச்சிக்காகவும் தானமாகவும் கொடுத்துள்ளார் உமாமகேஷ்.