adani twitter
இந்தியா

Gpay, PhonePe-க்கு போட்டியாக Paytm நிறுவனத்தை வாங்கும் அதானி?

Prakash J

பல துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி குழுமம் UPI சேவையில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அதானி குழுமத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், யுபிஐ பரிவர்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேடிஎம் செயலி நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதானி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதானி

ஒன் 97 நிறுவனத்தின் சுமார் ரூ. 4,218 கோடி மதிப்புடைய 19% சதவீத பங்குகள் பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மா வசம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளதால் அதை சாதகமாக பயன்படுத்தி அதானி குழுமம் கருதுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒடிசா| மேடையில் பேசும் நவீன் பட்நாயக்.. நடுங்கும் கையை மறைக்கும் விகே பாண்டியன்.. வைரலாகும் வீடியோ!

ஒன் 97 பங்குகளை அதானி வாங்கும்பட்சத்தில், இந்தியாவில் பின்டெக் துறையில் வலுவாக காலூன்றியுள்ள கூகுள் பே, போன் பே மற்றும் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அதானி குழுமம் உருவெடுக்கக்கூடும்.

கெளதம் அதானி

இதற்கிடையில், ’பங்குகளை விற்க எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை’ என பேடிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, இதே நிறுவனத்தை, இந்திய பணக்கார்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வாங்குவதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!